/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்திரை திருவிழா போட்டி: பங்கேற்க அழைப்பு
/
சித்திரை திருவிழா போட்டி: பங்கேற்க அழைப்பு
ADDED : மே 09, 2024 10:56 PM
அன்னுார்:அன்னுாரில் சித்திரை திருவிழா போட்டிகளில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னுார், அ.மு.காலனியில், சித்திரை திருவிழா வருகிற 11, 12 ஆகிய இரண்டு நாட்கள், எய்ம் பவுண்டேஷன் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நடக்கிறது.
இதில் 11ம் தேதி காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை குழந்தைகளுக்கு மினி மாரத்தான் நடைபெறுகிறது. மாலை 4:00 மணி முதல் இரவு வரை உரியடித்தல் மற்றும் கபடி போட்டி நடக்கிறது.
சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், 'டிவி' புகழ் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிமிக்ரி ஷோ, காவடியாட்டம் ஆகியவை நடைபெறுகிறது.
வரும் 12ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, பெண்களுக்கான கோலப் போட்டி நடக்கிறது. மாலையில் கலை, விளையாட்டு, தொழில்துறையில் சிறந்து விளங்குவோர் கவுரவிக்கப்படுகின்றனர்.
மூன்று வயது முதல் 17 வயது வரை நான்கு பிரிவுகளாக, பல்வேறு போட்டிகள் நடக்கிறது.
பெரியவர்களுக்கு கயிறு இழுத்தல் இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. இத்திருவிழாவில் பங்கேற்க விழா கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.