/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு
/
தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 04, 2025 11:23 PM
கோவில்பாளையம்; கவையன்புத்தூர் தமிழ் சங்க விழா, வரும் 9ம் தேதி நடக்கிறது.
கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம் சார்பில், விழா கோவில்பாளையம் விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில், வரும் 9ம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது. பேராசிரியை தங்கமணி தலைமை வகிக்கிறார்.
செம்மொழி தமிழ் மன்ற தலைவர் கீதா தயாளன், 'கேட்டார் பிணிக்கும், தகையவாய்' என்கிற தலைப்பில் பேசுகிறார். நாயன்மார்கள் குறித்த கவியரங்கம் நடக்கிறது.
'பெண்மையை போற்றி அதிகமாக பாடல்கள் பாடியவர் கண்ணதாசனே, வாலியே' என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
படித்ததில் பிடித்தது, அறிவோம் ஒரு அரிய செய்தி, பாவலர் நுால் அறிமுகம் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் அமுதம் பருக தமிழ் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.