/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவுவதே பாதுகாப்பானது!'
/
'முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவுவதே பாதுகாப்பானது!'
'முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவுவதே பாதுகாப்பானது!'
'முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவுவதே பாதுகாப்பானது!'
ADDED : ஆக 02, 2024 06:10 AM
பாலக்காடு:
முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவுவதே பாதுகாப்பானது, என, கலால் துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு நகர பகுதியில் கனமழையால் பாதித்து நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு ஆறுதல் கூறிய, கலால் துறை அமைச்சர் ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
நிவாரண நிதிக்கு எதிராக பிரசாரம் செய்பவர்களை மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். நன்கொடை வழங்குவதற்கு நியாயமான மற்றும் பாதுகாப்பான வழி முதல்வரின் நிவாரண நிதியாகும்.
அதற்கு பங்களிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற நீதிபதியே கூறியிருக்கிறார். பேரழிவு ஏற்படும் போது, இதிலும் லாபம் ஈட்ட பலர் களம் இறங்குவார்கள். இத்தகைய செயலை அரசு கண்காணித்து வருகிறது.
நிவாரண நிதிக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் நேரடி நன்கொடை என்று கூறி பணத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலக்காடு நகரில் தற்போது அச்சம் கொள்ள வேண்டிய நிலைமை இல்லை. பாதிப்படைந்த பகுதிகளில் மழை வெள்ளம் வடிய துவங்கியுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
நகராட்சி தலைவர் பிரமீளா, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், மாவட்ட கலெக்டர் சித்ரா ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.