/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜூனியர், சீனியர் தடகளம்; பரமக்குடி அணி சாம்பியன்
/
ஜூனியர், சீனியர் தடகளம்; பரமக்குடி அணி சாம்பியன்
ADDED : ஜூலை 18, 2024 12:16 AM

கோவை : நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தடகளப்போட்டியில், பரமக்குடியை சேர்ந்த அசுகரன் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6வது ஜூனியர் மற்றும் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கு, பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்று, 366 புள்ளிகளுடன் பரமக்குடி அசுகரன் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோவையை சேர்ந்த டிரையம்ப் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணி, 314 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், திருப்பூர் ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 208 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசுகளை, கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் பரசுராமன், துணை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் ஸ்ரீதர், கோவை மாவட்ட தடகள சங்க தொழில்நுட்ப கமிட்டி தலைவர் சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.