/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாலை துவங்கி நள்ளிரவு தாண்டியும் உழைத்த கலாம்
/
அதிகாலை துவங்கி நள்ளிரவு தாண்டியும் உழைத்த கலாம்
ADDED : ஜூலை 26, 2024 11:30 PM
இறுதிக்காலம் வரை அப்துல் கலாம், கடும் உழைப்பாளியாகத் திகழ்ந்தார். அதிகாலை துவங்கி நள்ளிரவையும் தாண்டி, அவர் பணிபுரிந்தார்.
அப்துல் கலாமுக்கு 24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர், ஹரி செரின்டன். கலாம் குறித்து அவர் கூறிய தகவல்கள்:
கலாம் அதிகாலை 6:30 மணி முதல் பணிகளைத் தொடங்கி விடுவார். இரவு 2:00 மணி வரை அவரது பணிகள் தொடரும். அதற்கு பின்னரே உறங்குவார். தொலைக்காட்சி பார்க்க மாட்டார். ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை, விரும்பி கேட்பார்.
தினமும் அவருக்கு ஏராளமான அழைப்புகள் வரும். கருத்தரங்கில் பேச, விழாக்களில் பங்கு கொள்ள என்று அந்த அழைப்புகள் இருக்கும். அவற்றையெல்லாம் தினமும் பார்த்து விடுவார். கலாம் போன்று, இந்த நாட்டுக்கு ஏராளமான தலைவர்கள் உருவாக வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.