/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பன் கலை மன்ற மாதாந்திர நிகழ்ச்சி
/
கம்பன் கலை மன்ற மாதாந்திர நிகழ்ச்சி
ADDED : மே 17, 2024 11:21 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின், 356வது மாதாந்திர நிகழ்ச்சி, பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. நிர்வாகி நசீர் முகமது, புலவர் செல்லமுத்து, தமிழ்தாய் வாழ்த்து பாடல்களை பாடினர். டாக்டர் அஜ்மல்கான் வரவேற்றார்.
கம்பன் கலை மன்றத்தின் செயலாளர் சிவக்குமார், மே தின அறிமுக உரையாற்றினார். கோவை இலக்கிய பெருமன்ற நிர்வாகி புருேஷாத்தமன் தலைமை வகித்து, கம்பரின் ஏர் எழுபதுஎன்கிற நுாலில் இருந்தும், உழைப்பாளர்களின் பெருமைகளை பேசும் பாடல்களைஎடுத்துக்கூறி பேசினார்.
என்.ஜி.எம்., கல்லுாரியின் பேராசிரியர் புஷ்பராணி, அகில இந்திய வக்கீல் சங்கத்தின் தேசிய துணை தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பேசினர். நிர்வாகி காளிமுத்து நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் சண்முகம், மன்ற நிர்வாகிகள் விவேகானந்தன், காளிமுத்து, ரவீந்திரன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

