/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்கில் நினைவு ஊர்வலம் மாணவர்கள் வீரவணக்கம்
/
கார்கில் நினைவு ஊர்வலம் மாணவர்கள் வீரவணக்கம்
ADDED : ஜூலை 27, 2024 02:13 AM

- நிருபர் குழு -
உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில், கார்கில் நினைவு அஞ்சலி தினம் அனுசரிக்கப்பட்டது.
கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச்சென்று, வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.
பள்ளியில் துவங்கி, அண்ணா குடியிருப்பு வழியாக சுற்றுப்பகுதிகளுக்கு கைகளில் பதாகைகளை ஏந்தி, வீர வணக்கம் செலுத்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பள்ளி செயலாளர் நந்தினி முன்னிலை வகித்தார்.
உடுமலை காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், வனத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சகுந்தலாமணி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
பொள்ளாச்சி: பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய மணவர் படையின் சார்பில், 'கார்கில் வெற்றி தினம்' மற்றும், கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.
கல்லுாரியின் கல்வி சார் தாளாளர் சிவானி கிருத்திகா, கல்லுாரி முதல்வர் கண்ணன், வணிகவியல் துறை முதன்மையர் சபரிநாதன், தேசிய மாணவர் படை அலுவலர் பவித்ரா, தேசிய மாணவர் படையினர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.