sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.எம்.சி.எச்.,ல் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

/

கே.எம்.சி.எச்.,ல் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்


ADDED : பிப் 27, 2025 09:16 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி ரோடு, பீளமேட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம், மார்ச் 1 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

மூட்டு தேய்மானம் என்பது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்னை. 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு மூட்டுகளில் தேய்மானம் அல்லது வலி ஏற்பட்டால் அது விளையாட்டு அல்லது விபத்துகளில் ஏற்படும் காயங்களே காரணமாகும்.

40 வயதுக்கு மேல் பலருக்கு மூட்டு ஜவ்வுகளில் சிதைவு ஏற்படும். இதனால், தேய்மானம், ஜவ்வு தசைகள் பிய்ந்து விடும். மூட்டுகளில் வலி, நடக்க சிரமம், வீக்கம், கால்களை மடக்கி நீட்டுவதில் சிரமம் ஏற்படும். இப்பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தேவையான பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம். பரிசோதனையில் முற்றிலுமாக எலும்பு தேய்மானம் கண்டறியப்பட்டால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

கே.எம்.சி.எச்.,ல் ரோபோடிக் மூட்டு மாற்று கருவி உள்ளது. இதன் வாயிலாக, 750க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இக்கருவியில், அறுவை சிகிச்சை சுலபமாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

மருத்துவமனையில் மார்ச் 1 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது. முகாமில் பங்கேற்போருக்கு கட்டணத்தில் 20 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 74188 87411என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us