/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிருஷ்ணா கல்வி குழுமம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்'
/
'கிருஷ்ணா கல்வி குழுமம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்'
'கிருஷ்ணா கல்வி குழுமம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்'
'கிருஷ்ணா கல்வி குழுமம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்'
ADDED : மார் 26, 2024 01:22 AM
போத்தனூர்:கிருஷ்ணா கல்வி குழுமம், நாஸ்காம் இடையே தொழில்நுட்ப திறன் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா கல்வி குழும வளாகத்திலுள்ள அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணா கல்வி குழும தலைவர் மலர்விழி, நாஸ்காம் அமைப்பின் கல்வி மற்றும் அரசு தொடர்புகள் துறை தலைவர் உதயசங்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
முன்னதாக உதயசங்கர் பேசுகையில், நாஸ்காம் அமைப்பு, இக்கல்வி குழுமத்தில் பயில்வோருக்கு பல்வேறு தொழில்நுட்ப திறன் கொள்ளல் பயிற்சிகளை அளிக்கும். இப்பயிற்சியினை, அரசு பள்ளி மற்றும் பிற கல்வி நிறுவன மாணவர்களுக்கு அளிக்க முன்வரவேண்டும், என்றார்.
கல்வி குழும தலைவர் மலர்விழி தலைமை வகித்து பேசுகையில், இந்த ஒப்பந்தம் வாயிலாக, மிகப்பெரும் நிறுவனங்களில் வளமான வேலைவாய்ப்பு அமைவது நிச்சயம், என்றார்.
கிருஷ்ணா இன்ஜி. மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சோபியா, வேலைவாய்ப்பு பிரிவு டீன் ஜெயசுதா மற்றும் கிருஷ்ணா கல்வி குழும கல்லூரிகளின் முதல்வர்கள், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

