/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரிவரதராஜ பெருமாளுக்கு 17ல் கும்பாபிேஷகம்
/
கரிவரதராஜ பெருமாளுக்கு 17ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 13, 2024 11:21 PM
உடுமலை : திருமூர்த்திமலையில் உள்ள, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று காலை 9:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது.
தொடர்ந்து மகா சுதர்சன ேஹாமம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மேல், திவ்ய பிரபந்த சேவா காலம், வாஸ்து சாந்தியும், மாலை, 5:00 மணிக்கு மேல், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அங்குர ேஹாமம் நடக்கிறது.
நாளை (15ம் தேதி) முதற்கால யாக பூஜை, மாலை, 5:00 மணிக்கு மேல், 2ம் கால யாக பூஜை நடக்கிறது. வரும், 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், 3ம் கால யாக பூஜையும் நடைபெறவுள்ளது.
வரும் 17ம் தேதி காலை, 6:30 மணிக்கு மேல், ஐந்தாம் கால யாக பூஜை, காலை 9:35 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் மூலவர் விமானம் மற்றும் பரிவார விமானங்கள் கும்பாபிேஷகமும், காலை, 10:00 மணிக்கு மேல், மூலவர் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.