/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
/
சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : மே 03, 2024 11:15 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், 2ம் தேதி, மங்கள இசையுடன் துவங்கியது. கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், நந்தி ஆவாகனம், வாஸ்து பூஜை, கலச ஸ்தாபனம், அக்னி பிரவேசம் நடந்தது.
தொடர்ந்து மாலையில், மருந்து சாத்துதல், சயநாதி வாசம், பாராயணங்கள் மற்றும் தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
நேற்று, 3ம் தேதி, காலை கும்பாபிஷேக ஹோமங்கள் மற்றும் வைபவங்கள் நடந்தது. இதில், கொண்டம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கும்பாபிஷேக வைபவம், பஞ்சாமிர்த அபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.