/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுரை, கோவை மெட்ரோவுக்கு நிலம் எடுக்கும் பணி
/
மதுரை, கோவை மெட்ரோவுக்கு நிலம் எடுக்கும் பணி
ADDED : பிப் 26, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மற்றும் கோவையில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கி உள்ளோம். இதுகுறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.
எந்தெந்த இடங்களில், அரசு நிலம் மற்றும் தனியார் நிலம் உள்ளன என்பதை பார்த்து, தேவையான இடங்களை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாங்கும். பணிகளை துவங்கிய பின், மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

