/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமோகமாக நடக்குது மண் கடத்தல்! 'இன்பார்மர்'க்கு கொலை மிரட்டல்
/
அமோகமாக நடக்குது மண் கடத்தல்! 'இன்பார்மர்'க்கு கொலை மிரட்டல்
அமோகமாக நடக்குது மண் கடத்தல்! 'இன்பார்மர்'க்கு கொலை மிரட்டல்
அமோகமாக நடக்குது மண் கடத்தல்! 'இன்பார்மர்'க்கு கொலை மிரட்டல்
ADDED : ஆக 06, 2024 11:42 PM
அன்னுார் : சட்டவிரோதமாக மண் கடத்துவோர் குறித்து தகவல் தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிச்சாமி, அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:
கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையத்தில் உள்ள நீர்பிடிப்பு குட்டையில், சட்ட விரோதமாக லோடு கணக்கில் மண் எடுத்து கடத்தப்பட்டது. இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மண் கடத்தலில் ஈடுபட்டோரிடம் தட்டி கேட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மண் கடத்தலில் ஈடுபட்ட இருவர், விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் குளத்தின் நடுவே கருவேல மரங்களை வெட்டி, கரி சுட்டு வருகின்றனர். இதனால் குளத்தில் உள்ள நீர் மாசுபடுகிறது. எனவே, சட்டவிரோதமாக குளத்தில் மண் எடுத்த நபர்கள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விவசாயிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கூறுகையில், 'சட்டவிரோதமாக மண் கடத்துவது குறித்து கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குனருக்கும், கோவை மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.