/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்
/
காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:சூலூர் வட்டாரத்தில் காடு வெட்டி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மோளகாளியாளையம் அரசு உதவி பெறும் பள்ளியிலும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில், லட்சுமி நாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி, குமாரபாளையம், வதம்பச்சேரி, வாரப்பட்டி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் நேற்று முன்தினம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ததுவக்கி வைக்கப்பட்டது.
லட்சுமிநாயக்கன் பாளையம் பள்ளியில், கலெக்டர் கிராந்தி குமார், எம்.பி., ராஜ்குமார் ஆகியோர் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர்.
கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஸ்வேதா சுமன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.