/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 'டிஜியாத்ரா' அறிமுகம் விமான பயணம் எளிதாகும் இனி!
/
கோவையில் 'டிஜியாத்ரா' அறிமுகம் விமான பயணம் எளிதாகும் இனி!
கோவையில் 'டிஜியாத்ரா' அறிமுகம் விமான பயணம் எளிதாகும் இனி!
கோவையில் 'டிஜியாத்ரா' அறிமுகம் விமான பயணம் எளிதாகும் இனி!
ADDED : செப் 05, 2024 11:39 PM
கோவை:எவ்வித சிரமமுமின்றி எளிதாக, விமானப்பயணம் அமைய வசதியாக 'டிஜியாத்ரா' சேவை கோவை விமான நிலையத்தில் துவங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் செல்லும்போதே உங்களை அடையாளம் கண்டு, உங்கள் டிக்கெட் விவரங்களை சரி பார்த்து எளிதாக வழி ஏற்படுத்தித் தரும் டிஜியாத்ரா தொழில்நுட்ப முறை கோவை விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வசதியை, மெய்நிகர் காணொளி வழியாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சருப்பு துவக்கி வைத்தார். விசாகப்பட்டினத்தில் இருந்தவாறு கோவை, பாட்னா, புவனேஸ்வர், கோவா, இந்தூர், ராஞ்சி பஜோவா விமான நிலையங்களில் அறிமுகம் செய்தார்.
மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. விமான பயணிகள் எளிதாகவும், வசதியாகவும், உடல் நல மருத்துவ பரிசோதனை சிக்கல்கள் இல்லாமல் பயணம் மேற்கொள்ள இது வசதி செய்து தருகிறது.
பல்வேறு இடங்களில் விமான டிக்கெட்டை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முகத்தை பார்த்தவுடன் முழுமையாக அடையாளங்களை உணர்ந்து, விமான போக்குவரத்துக்கான அனைத்து வழிமுறைகளையும் சோதனைகளும் விரைந்து செய்து சரி பார்த்து, பயணத்துக்கு அனுமதி அளிக்கிறது இப்புதிய தொழில்நுட்பம். பாதுகாவல் படையிடம் டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
கோவை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், ''கோவை விமான நிலையத்தில் ஆறு நுழைவு இடங்களிலும், நான்கு பாதுகாப்பு நுழைவு வாயில்களிலும், ஒன்பது பயணத்துக்கு தயாராகும் இடங்களிலும், ஒரு மாற்று வழியிலும் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.
''பயணிகள் எளிதாக செல்வதோடு தங்களது பொருட்களையும் எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக் கொள்ள முடியும்,'' என்றார்.