/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் கொலை கண்டித்துகோர்ட் புறக்கணிப்பு
/
வக்கீல் கொலை கண்டித்துகோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஆக 09, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவையில், வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் உதயகுமார்,48. இவர், கடந்த 2ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். பணத்தகராறில் நடந்த இக்கொலை வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
வக்கீல் கொலை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரியும், கோவை வக்கீல் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில், 3,000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆஜராகாததால் அனைத்து கோர்ட்களில் விசாரணை பாதிக்கப்பட்டது.