/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாயில் கசிவு; தண்ணீர் விரையமாவதை தடுக்கணும்
/
குடிநீர் குழாயில் கசிவு; தண்ணீர் விரையமாவதை தடுக்கணும்
குடிநீர் குழாயில் கசிவு; தண்ணீர் விரையமாவதை தடுக்கணும்
குடிநீர் குழாயில் கசிவு; தண்ணீர் விரையமாவதை தடுக்கணும்
ADDED : மே 12, 2024 11:22 PM

சுகாதாரம் பாதிப்பு
பொள்ளாச்சி, நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு ராஜா மில் ரோட்டில் உள்ள, தனியார் உணவகம் அருகே கால்வாயில், குப்பையுடன் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஹரிஸ்ரீ, பொள்ளாச்சி.
வீணாகும் தண்ணீர்
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அதிக அளவு தண்ணீர் விரையமாகிறது. இதை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் கவனித்து உடனடியாக குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சத்தி, கிணத்துக்கடவு.
சிக்னல் வேலை செய்யுமா
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'யூ டர்ன்' பகுதிகளில் சிக்னல்கள் அவ்வப்போது வேலை செய்வதில்லை. இதனால் இரவு நேரத்தில் பயணிப்பவர்களுக்கு இப்பகுதியில் திரும்பும் வாகனங்கள் சரியாக தெரியாததால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிக்னல்களை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும்.
- -கண்ணன், கிணத்துக்கடவு.
பூங்காவை பராமரிக்கணும்
உடுமலை நகராட்சி ஸ்ரீ நகரில் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் இருப்பதால், குப்பை, மரத்தின் இலைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சியினர் பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணன், உடுமலை.
ரோடு மோசம்
கிணத்துக்கடவு, முள்ளுப்பாடியில் இருந்து பட்டணம் செல்லும் ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அதிக அளவு தடுமாறுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -கணேஷ், தாமரைக்குளம்.
பயணியர் சிரமம்
உடுமலையிலிருந்து கொழுமம், கொமரலிங்கம் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களில் பயணியர் ஏறும், இறங்கும் படிக்கட்டுகள் உயரமாக இருப்பதால், முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றின் உயரத்தை குறைக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், கொழுமம்.
மண் குவியல்
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை, பழநி ரோட்டில் சென்டர் மீடியன் உள்ளது. இதில் மண் தோண்டப்பட்டு குவியலாக போடப்பட்டுள்ளது. இம்மண் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் மீது படுகிறது. எனவே, மண் குவியலை சீரமைத்து, செடிகளை வளர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமசாமி, உடுமலை.
நாய்கள் தொல்லை
உடுமலை, பி.வி.லே-அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுநர்களை தொடர்ந்து துரத்தி அச்சுறுத்துகின்றன. ரோட்டில் விளையாடும் குழந்தைகளை விரட்டி கிழே விழ செய்கின்றன. வாகனங்களின் குறுக்கே அடிக்கடி வருவதால் ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
- ராம்குமார், உடுமலை.
கூடுதல் இருக்கை அமைக்கணும்
உடுமலை, பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு போதுமான இருக்கைகள் இல்லை. இதனால், அங்கு வரும் பயணியர் நீண்ட நேரம் பஸ்சுக்காக நிற்க வேண்டியதுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சியினர் கூடுதல் இருக்கை வசதிகள் செய்து தர வேண்டும்.
- செல்வம், உடுமலை.
ஸ்துாபியை சீரமைக்கணும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், ராஜேந்திரா ரோடு துவக்கத்தில் நகராட்சி ஸ்துாபி உள்ளது. இதன் வளாகம் பராமரிக்கப்படாமல் குப்பை, கூளம் நிறைந்து காணப்படுகிறது. இதை நகராட்சியினர் சுத்தம் செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
தண்ணீரில் குப்பை
வால்பாறை படகு இல்லத்திற்கு, காமராஜர் நகரிலிருந்து வரும் தண்ணீர் குப்பை கலந்து மாசடைந்து வருகிறது. இதனால் படகு இல்லம் பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதில் சேரும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ரப்பேல், வால்பாறை.