/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'100க்கு 100' ஓட்டு இலக்கை அடைவோம்! வாக்காளர்களுக்கு கலெக்டர் அழைப்பு
/
'100க்கு 100' ஓட்டு இலக்கை அடைவோம்! வாக்காளர்களுக்கு கலெக்டர் அழைப்பு
'100க்கு 100' ஓட்டு இலக்கை அடைவோம்! வாக்காளர்களுக்கு கலெக்டர் அழைப்பு
'100க்கு 100' ஓட்டு இலக்கை அடைவோம்! வாக்காளர்களுக்கு கலெக்டர் அழைப்பு
ADDED : ஏப் 18, 2024 11:57 PM
கோவை;கோவை மற்றும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் தவறாமல் இன்று (ஏப்., 19) ஓட்டளிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை, 7:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன.
நுாறு சதவீத ஓட்டுப்பதிவை எட்டும் வகையில், அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வை குறைபாடு கொண்டவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க, ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வர ஏதுவாக, தங்களது ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து, இன்று காலை, 6:00 முதல் இரவு, 7:00 மணி வரை தமிழக அரசு சாதாரண கட்டண பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். ஓட்டுச்சாவடிகளில் சாய்தள வசதி, சக்கர நாற்காலி, குடிநீர் வசதி, ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை தொகுதியில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்கள், பொள்ளாச்சி தொகுதியில், 15 லட்சத்து, 93 ஆயிரத்து, 168 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடைய அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க முன்வர வேண்டுமென, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

