தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்!

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்!

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்!


ADDED : ஜூன் 16, 2024 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு விவசாயிகளுக்கு, மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக கோடை உழவுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு, வேளாண்துறை சார்பில், 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் வாயிலாக, கோடை உழவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மொத்தமாக, 550 ஏக்கருக்கு, 6.6 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.

இதில், ஒரு விவசாயிக்கு, 5 ஏக்கர் அளவுக்கு (மானாவாரி நிலம்) மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. இதில், விதைக்கு, 50 சதவீதம் மானியம் அல்லது, 700 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது.

உழவு செய்வதற்கு மானியமாக ஏக்கருக்கு, 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். அல்லது வேளாண்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

இத்தகவலை, கிணத்துக்கடவு உதவி இயக்குனர் அனந்தகுமார், துணை வேளாண் அலுவலர் மோகன சுந்தரம், வேளாண் அலுவலர் அருள் கவிதா ஆகியோர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us