/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாழ்வியல் கல்வியை கற்பிக்க வேண்டும்'
/
'வாழ்வியல் கல்வியை கற்பிக்க வேண்டும்'
ADDED : பிப் 24, 2025 10:43 PM

மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், பொன்விழா ஆண்டு துவக்க விழா பள்ளியில் நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் சித்துராம் தலைமை வகித்தார்.
பள்ளி தலைவர் தியாகராஜன் வரவேற்றார். மூத்த உறுப்பினர் அனந்தகிருஷ்ணன் பள்ளியின் நுழைவாயிலில் பொன்விழா சின்னத்தை திறந்து வைத்தார். கோவை கட்டட வடிவமைப்பாளர் ரமணிசங்கர் பேசுகையில், ''மாணவர்களை அறிவில் சிறந்தவர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
பசிக்கு மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்வியல் கல்வியை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளிக்கு பாலாக வரும் மாணவர்களை, வெளியே போகும்போது அவர்களை, நெய்யாக ஆசிரியர்கள் மாற்றி அனுப்ப வேண்டும்,'' என்றார்.
விழாவில் ரோட்டரி தலைவர் செல்வம், செயலாளர் ஸ்ரீனிவாசன், பொருளாளர் வீராசாமி, செந்தில் குரூப் சேர்மன் ஆறுமுகசாமி, எஸ்.வி.ஜி.வி., பள்ளி நிர்வாக அலுவலர் சிவசதீஷ்குமார் உள்பட பலர் பேசினர். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் சுலோச்சனா நன்றி கூறினார்.