/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்
/
'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்
'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்
'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்
ADDED : ஆக 09, 2024 09:53 PM

கோவை:கோவை பீளமேடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 'குட்டிக் காவலர்கள்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் 80க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சாலை போக்குவரத்து விதிகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்த பள்ளியில் 'குட்டிக் காவலர்கள்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பீளமேடு போக்குவரத்து ஆய்வாளர் பெருமாள் துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா கூறியதாவது:
அனைத்து மாணவர்களும் போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் சிக்னல் பற்றி அறிந்து இருப்பது அவசியம். அதற்காக குட்டிக் காவலர்கள் திட்டத்தை துவங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தின் வாயிலாக, மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து குறித்து கற்றுக் கொடுக்கிறோம்.
எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு, ஆசிரியர்கள் குழுவாக சென்று பெற்றோர்களிடம் குழந்தைகளை சுகாதாரமாக பராமரித்து, தவறாமல் பள்ளிக்கு அனுப்பும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

