/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லுாலுா ஹைப்பர் மார்க்கெட்- பிளாட் 50 சதவீத சலுகை
/
லுாலுா ஹைப்பர் மார்க்கெட்- பிளாட் 50 சதவீத சலுகை
ADDED : ஜூலை 04, 2024 05:07 AM

கோவை : லுாலுா ஹைப்பர் மார்க்கெட் பிளாட், 50 சதவீதம் சலுகை விற்பனை இன்று துவங்குகிறது; வரும், 7ம் தேதி வரை நடக்கிறது.
கோவை அவினாசி ரோடு, லட்சுமி மில்ஸ் சந்திப்பில், லுாலுா ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. லுாலுா ஹைப்பர் மார்க்கெட் சார்பில், இன்று முதல் வரும், 7ம் தேதி வரை பிளாட், 50 சதவீத சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கக் கையேடு நேற்று வெளியிடப்பட்டது.
லுாலுா ஹைப்பர் மார்க்கெட் பொதுமேலாளர் பாலாஜி பேசுகையில், ''கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இதேபோன்று, 50 சதவீத சலுகை விற்பனையை அறிவித்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. அதைக்கருத்தில் கொண்டே, தற்போது இச்சலுகை விற்பனையை அறிவித்துள்ளோம்,'' என்றார்.
மண்டல மேலாளர் மகேசன் பேசுகையில், ''வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம். இந்த விற்பனை, 4, 5ம் தேதிகளில், காலை, 9:00 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரையிலும்; 6, 7ம் தேதிகளில், நள்ளிரவு, 2:00 மணி வரையிலும் நடக்கும்,'' என்றார்.
கொள்முதல் மேலாளர் சுனில்மேனன், மேலாளர் சஜில், விற்பனை மேலாளர் நவநீத் ஆகியோர் உடனிருந்தனர்.