/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரதராஜபுரம் பெருமாளுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம்
/
வரதராஜபுரம் பெருமாளுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம்
ADDED : மார் 25, 2024 01:06 AM
கோவை;வரதராஜபுரம் மாகாளியம்மன் கோவில் தோட்டத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ பூமிநீளா நாயிகா சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக் ஷண விழா நாளை மறு தினம் நடக்கிறது.
இன்று காலை 6:30 மணிக்கு மங்கள இசை, மஹாகணபதி ஹோமமும், 9:30க்கு மஹாலட்சுமி ஹோமமும், நவக்கிரஹ ஹோமமும், தனபூஜை, கோபூஜையும் நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜையும், மஹாகணபதி பூஜை, புண்யாஹ வாசனம், வாஸ்துசாந்தி, கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், 108 திரவ்ய யாகம், மஹாதீபாராதனை நடக்கிறது.
நாளை இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, திருமுறை சமர்ப்பணம், மஹாதீபாராதனை, மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, விமானகோபுர கலசஸ்தாபனம், மண்டபார்ச்சனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
நாளை மறுதினம் காலை, நான்காம் கால யாகபூஜை, மங்கள இசை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, நாடிசந்தனம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் யாத்ரதானம் கலசங்கள் கோவிலை வலம் வந்து, விமானகோபுரங்களுக்கு கும்பாபிஷே கம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து, மஹாதீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும். திரளாக பக்தர்கள் பங்கேற்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

