/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதான குழாய் உடைப்பு; குடிநீர் வினியோகம் தாமதம்
/
பிரதான குழாய் உடைப்பு; குடிநீர் வினியோகம் தாமதம்
ADDED : ஜூலை 11, 2024 06:16 AM
போத்தனூர் : சுந்தராபுரம் அருகே பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால், குடிநீர் வினியோகம் தாமதமாகியுள்ளது.
மாநகராட்சியின், 85 மற்றும் 94 முதல் நூறு வரையிலான வார்டுகளில், கடந்த சில மாதங்களாக ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு, இப்பகுதியில் செயல்படுத்தப்படும் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதே முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாலையில், பாதாள சாக்கடை பணி நடக்கிறது. இதற்காக கமலா நகர் அருகே குழி தோண்டுகையில், மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் குழி மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, அவ்விடத்தில் நீர் அதிகளவு வெளியேறியது. பாதாள சாக்கடை பணி மேற்கொள்வோர், நேற்று முன்தினம் குழாய் உடைப்பை சீரமைத்தனர்.
தொடர்ந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனால் ஏழு நாட்களில் வினியோகம் செய்யப்பட வேண்டிய குடிநீர், இரண்டு முதல் மூன்று நாட்கள் தாமதமாக வினியோகம் செய்யப்படுகிறது. குழி மூடப்படாததால், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.