/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
/
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
ADDED : பிப் 27, 2025 08:59 PM

உடுமலை,; உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, உலர் களங்களில் காய வைத்து விற்பனைக்கு தயார் செய்கின்றனர். தினமும் இ-நாம் திட்டத்தில் மக்காச்சோளம் ஏலம் நடந்து வருகிறது.
கடந்த, 14 ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடந்த ஏலத்தில், ஒரு குவிண்டால், மக்காச்சோளம், ரூ.2,400 முதல், ரூ. 2,475 வரை ஏலம் போனது. ஆனால், தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது.
கடந்த, 21ம் தேதி முதல், நேற்று வரை இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த மக்காச்சோளம் ஏலத்திற்கு, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, 33 விவசாயிகள், 237.48 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒரு குவிண்டால் மக்காச்சோளம், ரூ.2,310 முதல், 2,360 வரை விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு, 56 லட்சத்து, 22 ஆயிரத்து, 148 ரூபாயாகும்.
திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், '' உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் மக்காச்சோளம், கொப்பரை, மல்லி உள்ளிட்ட விளை பொருட்களை உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களங்களில் காய வைத்து, இ-நாம் திட்டத்தின் கீழ் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், '' என்றனர்.

