ADDED : ஜூன் 23, 2024 01:27 AM

தேவையான பொருட்கள்:
n கோழி- அரை கிலோ n மிளகு துாள் - ஒரு ஸ்பூன்n இஞ்சி பூண்டு பேஸ்ட்- இரண்டு ஸ்பூன் n முந்திரி - 10n கரம் மசாலா துாள்- ஒரு ஸ்பூன்n பட்டை - ஒரு இன்ச் n ஏலக்காய் - இரண்டு n பாதாம்- 10n பிரிஞ்சி இலை - ஒன்று n பிரஸ் கிரீம்- இரண்டு டீஸ்பூன்n தயிர்- கால் கப் n கசகசா - ஒரு ஸ்பூன் n தேங்காய்- கால்கப்n நெய் - தேவையான அளவு n உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி பின் ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிக்கனுடன் காய்ந்த மிளகாய், பட்டை, பிரிஞ்சி இலைகள், ஏலக்காய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் குக்கரில் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து, மூன்று விசில்கள் வேக விட வேண்டும்.மூன்று விசில் முடிந்த பிறகு, குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், கசகசா, முந்திரி மற்றும் பாதாம் முதலியவற்றை சேர்த்து சிறிது நீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சி ஜாரில் வெங்காயம் சேர்த்து வெங்காய பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து, நெய் உருகிய பின் அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். அடுத்ததாக அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதில் வெள்ளை மிளகு துாள் துாவி பிரட்டி விட வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் , கரம் மசாலா மற்றும் கெட்டி தயிர் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். கிரேவி கொதித்து கெட்டியாக வந்த பிறகு அதில் ப்ரஷ் கிரீம் சேர்த்து கிரேவியை நன்கு கிளறி விட வேண்டும். இப்போது, ருசியான மலாய் சிக்கன் கிரேவி ரெடி