/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேலாண்மை இணைய தளம் மொபைல் எண்கள் சரிபார்ப்பு
/
மேலாண்மை இணைய தளம் மொபைல் எண்கள் சரிபார்ப்பு
ADDED : மே 09, 2024 04:23 AM
உடுமலை, : பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில், மாணவர்களின் மொபைல் எண்கள் சரிபார்க்கும் பணிகள் நடக்கிறது.
புதிய கல்வியாண்டு 2024 - 25 ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. மாணவர்களின் விபரங்களை சரிபார்க்கவும், தேர்ச்சி பதிவுகள், பெற்றோரின் விபரம் உள்ளிட்ட அனைத்தையும், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் புதுப்பித்து வைப்பதற்கு, கல்வித்துறை தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறது.
தற்போது, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர், மொபைல் எண்களை சரிபார்ப்பதற்கு வழிமுறைகளை வழங்கியுள்ளது.
பெற்றோரின் மொபைல் எண்களுக்கு வரும் ஓ.டி.பி., மூலமாக, சரியான எண்களை பதிவு செய்வதற்கும், தவறான எண்களை மாற்றுவதற்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.