/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலசுப்பிரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா
/
பாலசுப்பிரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா
பாலசுப்பிரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா
பாலசுப்பிரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா
ADDED : மார் 05, 2025 10:41 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில், மாசி மாத கிருத்திகை விழா நடந்தது.
சிறுமுகை பழத்தோட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது.
காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, தொடர்ந்து பால் அபிஷேகம், கால சந்தி பூஜை நடந்தன. காலை, 10:00 மணிக்கு, எஸ்.புங்கம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் குழுவினரின் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடந்தது.
பின் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தன. வச்சினம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் கட்டளை பூஜைகள் நடந்தன.
தீபாராதனை முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.