/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளியில் மருத்துவ முகாம்
/
பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளியில் மருத்துவ முகாம்
பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளியில் மருத்துவ முகாம்
பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளியில் மருத்துவ முகாம்
ADDED : செப் 04, 2024 11:29 PM

வால்பாறை : வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னை அதிக அளவில் உள்ளது. காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்கள் குணமடைய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (நேசம் டிரஸ்ட்) உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிறப்பு மருத்துவ முகாமில், டாக்டர்கள் கலந்து கொண்டு பழங்குடியின மாணவர்களுக்கு பரிசோதனை செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.