/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் நீடிப்பு
/
மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் நீடிப்பு
ADDED : ஏப் 04, 2024 11:37 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில் சேவையை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது, என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரயில்வே நிர்வாகம் பயணத்தை அதிகப்படுத்தி வருகிறது. கோவை நீலகிரி ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுவர, இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த மாதத்துடன் நீடிக்கப்பட்ட ரயில் சேவை நிறைவடைந்தது. உடனடியாக ரயில்வே நிர்வாகம் ஏதும் அறிவிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், தென்னக ரயில்வே நிர்வாகம், இந்த ரயில் சேவையை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு திங்கட்கிழமை காலை, 7:30 மணிக்கு வந்து சேரும். இதே ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமை மாலை, 7:45 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை காலை, 7:45 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் சேவையை மே மாதம், 27ம் தேதி வரை, தென்னக ரயில்வே நிர்வாகம் நீடித்துள்ளது.

