ADDED : மார் 13, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, சுந்தராபுரத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் ஒன்று, பால் கேன்களுடன் நேற்று உக்கடம் நோக்கி சென்றது.
கரும்புக்கடை பஸ் ஸ்டாப்பை அடுத்து திருப்பத்தில் செல்லும்போது, எதிர்பாராவிதமாக வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் பால் கேன்கள் உடைந்து, சாலையில் பால் வழிந்தோடியது. டிரைவர் மாணிக்கம் காயமின்றி தப்பினார். கரும்புக்கடை போலீசார், கிரேனை வரவழைத்து வாகனத்தை மீட்டனர். விபத்தால் சிறிது நேரம் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.