/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி சிறுத்தது... சிக்கனம் சிறந்தது! நீர்மட்டம் 9.48 அடியாக சரிவு

ADDED : மே 31, 2024 02:17 AM
கோவை;சிறுவாணியில் மழை இல்லாததால் அணையின் நீர் மட்டம் நேற்று, 9.48 அடியாக இருந்தது.
கோவை மாநகராட்சிக்கும் வழியோர கிராமங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில், மழை பொய்த்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இம்மாத துவக்கத்தில், 10 அடியாக நீர் மட்டம் சரிந்தது.
தொடர்ந்து, வெப்பச் சலனம் காரணமாக, கோவையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. அணைப்பகுதியில், 59 மி.மீ., வரை மழை பதிவாகிய நிலையில் கடந்த, 16ம் தேதி, 10.04 அடியாக நீர் மட்டம் இருந்தது.
அதன் பிறகு பெரியளவில் மழை இல்லாததால் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, 9.48 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 4.4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'சிறுவாணி அணைப்பகுதியில் சில நாட்களாகவே மழை இல்லை. இங்கு தண்ணீர் இல்லாத சமயத்தில் பில்லுார் அணை கோவை மக்களுக்கு கை கொடுத்துவருகிறது. ஜூன் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில், பருவ மழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது' என்றார்.