sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னைகளுக்கு இடையே புதினா விவசாயம் ஜோர்

/

தென்னைகளுக்கு இடையே புதினா விவசாயம் ஜோர்

தென்னைகளுக்கு இடையே புதினா விவசாயம் ஜோர்

தென்னைகளுக்கு இடையே புதினா விவசாயம் ஜோர்


ADDED : மே 16, 2024 10:46 PM

Google News

ADDED : மே 16, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக புதினா பயிரிடப்படுவது, தற்போது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து விவசாயி பிரேம்குமார் கூறியதாவது:

தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக புதினா அதிக அளவில் பயிரப்படுகிறது. புதினாவை விவசாயம் செய்வது மிகவும் எளிது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கட்டினால் போதும். தென்னைக்கு விடும் தண்ணீரே பெரும்பாலும் போதுமானதாக இருக்கும்.

புதினா இலைகளை பறிக்க பறிக்க மீண்டும் வரும். இதனால் புதினா செடிகளை ஒரு முறை நடவு செய்தாலே, நீண்ட காலம் விவசாயம் செய்யலாம். மேலும் புதினா விவசாயத்தால், தென்னை மரங்களுக்கு கீழ் பகுதிகளில், களை செடிகள் வளருவது மிகவும் குறைவு.

தென்னை மரங்களுக்கு புதினா செடிகள் ஊட்ட சத்தாகவும் செயல்படுகிறது. தென்னையில் காய்கள் அதிகம் காய்க்கிறது. புதினாவால் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.----






      Dinamalar
      Follow us