/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிபோதையில் இருந்தவருக்கு 'லிப்ட்' கொடுத்து மொபைல் போன் 'ஆட்டை'
/
குடிபோதையில் இருந்தவருக்கு 'லிப்ட்' கொடுத்து மொபைல் போன் 'ஆட்டை'
குடிபோதையில் இருந்தவருக்கு 'லிப்ட்' கொடுத்து மொபைல் போன் 'ஆட்டை'
குடிபோதையில் இருந்தவருக்கு 'லிப்ட்' கொடுத்து மொபைல் போன் 'ஆட்டை'
ADDED : ஜூலை 05, 2024 02:45 AM
கோவை:காந்திபுரம் அருகே குடிபோதையில் படுத்துகிடந்தவரை வீட்டில் விடுவதாக அழைத்து சென்று பணம், மொபைல்போன் அடித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஆகாஷ்,21. இவர் ஆவாரம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சித்தாபுதுாரில் உள்ள நிறுவனத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி பெண்கள் மகளிர் கல்லுாரி அருகே குடிபோதையில் நடந்துசெல்ல முடியாத நிலையில் ஆகாஷ் படுத்துகிடந்தார்.
அங்கு டூ வீலரில் வந்த பூளுவபட்டியை சேர்ந்த ராஜிவன்,23 மற்றும் சரவணம்பட்டியை சேர்ந்த கிஷோர்,18 ஆகியோர், ஆகாஷிடம் பேச்சுகொடுத்து ஆவாரம்பாளையம் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். தொடர்ந்து, குடிபோதையில் இருவருக்கும் இடையே ஆகாஷ் அமர்ந்து பயணித்துள்ளார்.
ஆவாரம்பாளையம் சென்று இறங்கியதும் ரூ.1,300 ரொக்கம், மொபைல் போன் காணாமல் போனது தெரிந்து ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஆகாஷ் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ராஜிவன், கிஷோர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
பின்னர், சிங்காநல்லுார் குட்டி நாயக்கன் லே-அவுட்டை சேர்ந்த அஜய்குமார்,25, இங்கு தனியார் பஸ் கண்டக்டராக இருக்கும் துாத்துக்குடியை சேர்ந்த லோகேஸ்வரன்,23, பூளுவபட்டியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் கீதன்,22 ஆகியோரும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் கூறுகையில்,'இவர்கள் ஐந்து பேரும் குடிபோதையில் இருப்பவர்களிடம் இருந்து பணத்தை அடித்து அதில் ஜாலியாக இருக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி, ஆகாஷிடம் இருந்து பணத்தையும், செல்போனையும் அடித்து அதில் கிடைத்த பணத்தில் ஜாலியாக இருந்துள்ளனர். இதையடுத்து ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்' என்றனர்.