/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு
/
ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு
ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு
ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு
ADDED : ஜூலை 22, 2024 09:23 AM

சென்னை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்த, ஆர்.எஸ்.எஸ்., குருபூஜை விழாவில், தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., சார்பில், 1928 முதல் ஆண்டுதோறும் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் காவிக் கொடிக்கு முன், தங்களால் இயன்றதை அர்ப்பணிக்கின்றனர்.
கடந்த 1928ல், முதல் குருபூஜை விழா நடந்தபோது, தலைமை வகித்த சிறப்பு விருந்தினர், 'அமைப்புக்கு நிதி வசூலிக்க இது சிறந்த ஏற்பாடு' என்றார். குருபூஜை என்பது நிதி வசூலிப்பதற்கான ஏற்பாடு அல்ல; பணம் முக்கியமல்ல. தேசத்திற்காக, தர்மத்திற்காக தங்களால் இயன்றதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
காவி என்பது பாரதிய கலாசாரம், பண்பாடு, தியாகத்தின், தர்மத்தின் அடையாளம். தனிநபர்களிடம் நிறை, குறைகள் இருக்கும். எனவே தான், காவிக் கொடியை, அதாவது சித்தாந்தத்தை குருவாக ஆர்.எஸ்.எஸ்., ஏற்றுள்ளது. ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்., தொண்டரும், குரு தட்சணை அளிக்கிறார். அதற்கான ஏற்பாடே குருபூஜை.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தேசமும், தர்மமும் தான் முக்கியம். நம் கலாசாரம், தர்மத்திற்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம், தேசத்தை காக்க ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன் வருகின்றனர்.
தேசத்திற்காக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை, ஆர்.எஸ்.எஸ்., ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

