/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுவழித்தடம் குறித்த அறிவிப்பு வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
/
மாற்றுவழித்தடம் குறித்த அறிவிப்பு வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
மாற்றுவழித்தடம் குறித்த அறிவிப்பு வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
மாற்றுவழித்தடம் குறித்த அறிவிப்பு வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 30, 2024 11:59 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் இருந்து, திண்டுக்கல் நோக்கி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி அருகே, நல்லாம்பள்ளியில் இருந்து அந்தியூர் வரையிலான பகுதியில், பெருமளவு பணிகள் நிறைவடைந்து வருகின்றன.
இதற்காக, கோமங்கலம்புதுார், கெடிமேடு, கோலார்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில், வாகனங்கள் திசை மாறி இயக்க, டிரம் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், முக்கிய சாலை சந்திப்புகள், கிராமங்களைக் கடந்து செல்லும் பகுதிகளில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதத்தில், ஒளிபிரதிபலிக்கும் 'ரிப்ளக்டர்'கள் காணப்படுவதில்லை.
இதனால், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள், வளைவுகளில் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. சில பகுதிகளில் இரு பிரிவுகளாக சாலை இருப்பதால், எந்த வழித்தடத்தில் செல்வது என, வாகன ஓட்டுநர்கள் குழப்பம் அடைகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'இரவில், முகப்பு விளக்கு வெளிச்சத்தை பிரதிபலித்து தெரியப்படுத்த, முக்கிய சாலை சந்திப்புகளில் 'ரிப்ளக்டர்' அமைக்க வேண்டும். நள்ளிரவில், புதிதாக அவ்வழித்தடத்தில் செல்வோர், அறிவிப்பு பலகை இல்லாததால், திணறுகின்றனர்.
தற்போதும், பணிகள் தொடர்வதால், மாற்று வழித்தடம் குறித்த தெளிவான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,' என்றனர்.