ADDED : மார் 04, 2025 11:26 PM
சூலுார்; கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால், ஏற்பட்ட தகராறில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் காரிய மங்கலம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுதாகர், 31. இவர் சூலூர் அடுத்த குளத்தூர் பிரிவில் தங்கி, பெயின்டிங் வேலைக்கு சென்று வந்தார். உடன் வேலை செய்பவர் திலக்சன்,25. கடந்த, 19ம் தேதி இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது, சுதாகர் தான் கடனாக கொடுத்த, 1,500 ரூபாயை, திலக்சனிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கீழே விழுந்த சுதாகர் காயமடைந்து மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த சூலுார் போலீசார், திலக்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிகிச்சை பலனின்றி சுதாகர் இறந்தார். கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.