/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம்மாழ்வார் ஜெயந்தி பக்தர்கள் தரிசனம்
/
நம்மாழ்வார் ஜெயந்தி பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 23, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், நம்மாழ்வார் ஜெயந்தி நடந்தது.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நம்மாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் கோவிலுக்குள் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் நம்மாழ்வார் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.