ADDED : ஆக 05, 2026 05:40 PM
கோவை: பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் உயிரியல் அறிவியல் சிறப்பு மையம் சார்பில், ‘பயோஇ-3: நிலையான புதுமைகள் – தொழில்முனைவு, சுகாதாரம், காலநிலை நடவடிக்கை மற்றும் சுழற்சி பொருளாதாரம்’ என்ற தலைப்பில், தேசிய மாநாடு நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஹாரதி தலைமை வகித்தார். பெங்களூரு பயோஇன்பர்மேடிக்ஸ், அப்ளைடு பயோடெக்னாலஜி நிறுவன இயக்குனர் சுந்தர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உயிரித் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து பேசினார்.
இந்திய அறிவியல் கழகத்தின் சூழலியல் அறிவியல் மைய பேராசிரியர் ரெனீ மரியா போர்ஜஸ், சென்னை சவீதா மருத்துவ, தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் பேராசிரியர் சுரேஷ்பாபு, சி.எஸ்.ஐ.ஆர்., தேசிய கடலியல் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ராஜீவ் சரஸ்வத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
உயிரித் தொழில்நுட்பம் பற்றி பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் நடந்தன. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், தொகுப்பு நுாலாக வெளியிடப்பட்டன.
