/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய புள்ளியியல் தின கொண்டாட்டம்
/
தேசிய புள்ளியியல் தின கொண்டாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 01:12 AM

கோவை;கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் கணிதத்துறை சார்பில், தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது.
தரவு பகுப்பாய்விற்கான கருவிகள் மற்றும் துறைகளுக்கிடையே போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் தங்கள் கட்டுரைகள், போஸ்டர்களை சமர்ப்பித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும், பிற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப (புள்ளியியல்) இணைப் பேராசிரியர் கங்கை செல்வி, தரவு சேகரிப்பில் புள்ளிவிவரங்களின் முக்கியப் பங்கு மற்றும் பகுப்பாய்வு புள்ளிவிவர அறிவின் அவசியம் குறித்து விளக்கினார். சங்கரா கல்லுாரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், கணித்துறைத் தலைவர் திருச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.