/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திப்பாளையம் ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
/
அத்திப்பாளையம் ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
அத்திப்பாளையம் ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
அத்திப்பாளையம் ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
ADDED : பிப் 24, 2025 10:52 PM
கோவில்பாளையம், ; அத்திப்பாளையம் ஊராட்சியில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ஏழு நாள் முகாம் அத்திப்பாளையம் ஊராட்சியில் நடந்தது. முகாமில், அம்மா சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், பஸ் ஸ்டாப், நூலகம், பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மை பணி நடந்தது. ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், நடந்த பொது மருத்துவ முகாமில், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச முகாம் நடந்தது. கால்நடை முகாமில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிறைவு விழாவில், கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார். என். எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, எஸ்.என்.ஆர். அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் ராம்குமார், நிர்வாக அதிகாரி மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.