/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு வேப்ப மரக்கன்றுகள் இலவசம்
/
விவசாயிகளுக்கு வேப்ப மரக்கன்றுகள் இலவசம்
ADDED : ஆக 01, 2024 01:00 AM
மேட்டுப்பாளையம் : காரமடை வட்டாரத்தில், விவசாயிகளுக்கு வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியிருப்பதாவது:- காரமடை வட்டார வேளாண்மை துறையில் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
அசாடிரக்டின் என்ற வேதியியல் மூலப் பொருட்களை கொண்ட வேப்பிலை, வேப்பங் கொட்டை, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை பூச்சிக் கொல்லியாகவும், உரமாகவும் பயன்படுத்துவதின் வாயிலாக இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்படுகளை குறைக்கலாம். இதன் வாயிலாக மண்வளத்தை மேம்படுத்தலாம்.
குறைந்த அடர்வு நடவு முறை வாயிலாக ஏக்கருக்கு 200 வேப்பமரக்கன்றுகளும், வயல் மற்றும் பண்ணக்குட்டைகளின் வரப்புகளில் நடவு செய்ய ஏக்கருக்கு 60 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் வரை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
---