/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
/
சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
ADDED : பிப் 23, 2025 02:48 AM

அன்னுார்: அன்னுார் அருகே, 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
காட்டம்பட்டி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 567 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில், 'நபார்டு' திட்டத்தில், 85 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நான்கு வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொலி வாயிலாக, இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் பிரபாகர், பள்ளி புரவலர் ஹரி மோகன் குமார், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், லட்சுமிகாந்த், செல்வராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.