/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலை சிற்றுண்டி திட்டம் இல்லை; பேரூராட்சி மாணவர்கள் ஏமாற்றம்
/
காலை சிற்றுண்டி திட்டம் இல்லை; பேரூராட்சி மாணவர்கள் ஏமாற்றம்
காலை சிற்றுண்டி திட்டம் இல்லை; பேரூராட்சி மாணவர்கள் ஏமாற்றம்
காலை சிற்றுண்டி திட்டம் இல்லை; பேரூராட்சி மாணவர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 14, 2024 01:00 AM
அன்னூர்;காலை சிற்றுண்டி திட்டம், பேரூராட்சியில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
தமிழக அரசு கடந்த ஆண்டு, அனைத்து அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கியது. நாளை முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
அரசின் அறிவிப்பால், அன்னூர் பேரூராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளான தேசிய வித்யா சாலை மற்றும் சி.எஸ்.ஐ., துவக்க பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வட்டார கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, 'இந்த திட்டம் பேரூராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது. கிராம ஊராட்சிக்கு மட்டுமே வழங்கப்படும்' என்று கூறி விட்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்படாததால், பல ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.