/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு நீர் வெளியேற்றும் கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் போடுகிறது 'கிடுக்கிப்பிடி'
/
கழிவு நீர் வெளியேற்றும் கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் போடுகிறது 'கிடுக்கிப்பிடி'
கழிவு நீர் வெளியேற்றும் கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் போடுகிறது 'கிடுக்கிப்பிடி'
கழிவு நீர் வெளியேற்றும் கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் போடுகிறது 'கிடுக்கிப்பிடி'
ADDED : செப் 10, 2024 01:55 AM
கோவை:கோவையில் உள்ள குளங்களில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்க, கழிவு நீரை வெளியேற்றும் அனைத்து கட்டடங்களுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதுவரை இணைப்பு பெறாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி பராமரிப்பில் ஒன்பது குளங்கள் உள்ளன. நீர் வழங்கு வாய்க்கால்களில் கழிவு நீர் வந்து, குளங்களில் நேரடியாக கலக்கிறது. கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு, சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவதற்கு பதிலாக, நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, மாற்று வழியை செயல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் தன்னார்வ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலமாக குளங்களுக்கு கழிவு நீர் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தெந்த கட்டடங்களில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, அவை மழை நீர் வடிகாலில் நேரடியாக கலக்கிறது என்பதை கண்டறிந்து, பொறியியல் பிரிவினர் மூலம் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர், செப்டிக் டேங்க் கழிவு மட்டுமின்றி சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுகளையும் பாதாள சாக்கடையில் சேர்ப்பிக்கும் வகையில் இணைப்பு வழங்க வேண்டும்.
கட்டட உரிமையாளர்களே முன்வந்து, செய்வதற்கு அவகாசம் வழங்கப்படுகிறது; அவர்களால் இயலாத பட்சத்தில், மாநகராட்சி நிர்வாகமே செய்து, அத்தொகையை சொத்து வரியுடன் இணைத்து வசூலிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இனி வடிகாலில் மழை நீர் மட்டுமே செல்ல வேண்டும்; எவ்வித கழிவு நீராக இருந்தாலும், பாதாள சாக்கடை குழாயில் செல்லும் வகையில், இணைப்பு வழங்க வேண்டுமென, பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.