/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் விதை: வேளாண் துறை அறிவிப்பு
/
மானிய விலையில் விதை: வேளாண் துறை அறிவிப்பு
ADDED : ஏப் 22, 2024 11:22 PM
ஆனைமலை:'ஆனைமலையில், மானிய விலையில், விதைகள் வழங்கப்படுகிறது,' என ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:
ஆனைமலை வட்டார வேளாண் விரிவாக்க மையம், கோட்டூர் துணை வேளாண் மையத்தில், கார் அல்லது கோடை பருவ விதைப்புக்கு தேவையான நெல், தட்டை, கொள்ளு, மற்றும் நிலக்கடலை பயிர்களின் அரசு சான்று பெற்ற நல்ல முளைப்புத்திறன் தரக்கூடிய விதைகள் உள்ளன.
இவை, விதை கிராம திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் விதைகள், 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. சொட்டுநீர் பாசன வசதியுடன், இறவை பயிராக பயிரிட விரும்பும் விவசாயிகள், விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொண்ட பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

