/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்!
/
இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்!
இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்!
இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்!
ADDED : ஜூன் 20, 2024 05:55 AM
கோவை, : பி.எப்., அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெறும், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள், தங்களது பி.எப்., கணக்கில் இருந்து குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவு களுக்காகவும், வீடு கட்டுமானம், மனை வாங்குதல் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக,முன் பணம் பெற்று வருகின்றனர்.
விண்ணப்பிக்கும் சந்தாதாரர்களுக்கு, தொகை விரைவாக கிடைக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது.
சந்தாதாரர் விண்ணப்பிக்கும் தொகை ரூ.50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், உடனே அப்ரூவல் கிடைத்து விடும்.
இப்போது இந்த நடைமுறை, மேலும் 'அப்கிரேட்' செய்யப்பட்டு, முன் பணம் கூடுதலாகவும், விரைவாகவும் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை, ஆன்லைனில் பரிசீலனை செய்து, இரண்டு அல்லது மூன்று நாட்களில், சந்தாதாரரின் வங்கி கணக்கில் பணம் வந்து விடும். இந்த புதிய நடைமுறையை, பி.எப்., சந்தா தாரர்கள் வரவேற்றுள்ளனர்.