/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கையை நிறைவேற்றாவிடில் தேர்தலில் போட்டி; ஓ.பி.சி., ரைட்ஸ் கூட்டமைப்பு தீர்மானம்

ADDED : பிப் 24, 2025 01:00 AM

கோவை; கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 2026 தேர்தலில் அமைப்பின் வேட்பாளர்கள் போட்டியிடுவர் என, ஓ.பி.சி., ரைட்ஸ் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் மாநில, மாவட்ட தலைவர்கள் கூட்டம் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், இந்திய அரசியல் சாசன சட்டம் ஓ.பி.சி., மக்களுக்கு அளித்த அடிப்படை உரிமைகளான, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கையில் முன்னுரிமை, சலுகை, அரசு கல்வி உதவித்தொகை, நிபந்தனையின்றி கல்விக்கடன், கல்லுாரி முடித்த பின், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி, பின்னடைவு பணியிடங்களை திரும்ப தருதல் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
மாநில அரசு, 14 லட்சம் அரசு வேலையை 9 லட்சமாக குறைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வரும், 2026 ல் சட்டசபை தேர்தலில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என, தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும்.
இல்லை எனில் தேர்தலில், அமைப்பு பலமாக உள்ள தொகுதிகளில் அமைப்பின் வேட்பாளர்கள் போட்டியிடுவர் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டமைப்பின் தலைவர் ரத்னசபாபதி தலைமை வகித்தார்.
உபதலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.