sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழில்சார் சுகாதார திட்டங்கள் வலுப்பெற வேண்டும்: இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

/

தொழில்சார் சுகாதார திட்டங்கள் வலுப்பெற வேண்டும்: இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

தொழில்சார் சுகாதார திட்டங்கள் வலுப்பெற வேண்டும்: இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

தொழில்சார் சுகாதார திட்டங்கள் வலுப்பெற வேண்டும்: இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தல்


ADDED : மே 18, 2024 12:56 AM

Google News

ADDED : மே 18, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;'தொழில்சார் சுகாதார திட்டங்கள் வலுப்பெற்றால், தொழில்துறை வளம்பெறும்; தொழிலாளர்களும் முழுமையான ஆரோக்கியத்தை பெறுவர்' என்று, இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மாநாடு நடந்தது.

இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு, தெற்கு மண்டல தலைவர் நந்தினி ரங்கசாமி பேசியதாவது:

கோவை ஜவுளி உற்பத்திக்கு மட்டுமல்ல, இன்ஜினியரிங், தொழில்துறை மற்றும் கல்விக்கும் பெயர் பெற்றது. ஜவுளி ஆலைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி ஆலைகளில், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதில், கோவை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.

இம்முயற்சிகளில் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், அதன் வழிகாட்டு நெறிமுறை அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு முறைகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை உள்ளன. அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் வலுப்பெறச்செய்ய வேண்டும். அப்போது தொழிலாளர்களும் முழுமையான ஆரோக்கியத்தை பெறுவர்; சூழலும் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர ஈடுபாடு தேவை


சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் பேசுகையில்,'' கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, மழைநீர் சேகரிப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்கள் போன்ற சமூகத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் முயற்சிகளில், முக்கிய தொழில் நிறுவனங்கள், ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்,'' என்றார்.

டான்போஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, வணிகத்தின் மிக முக்கிய அங்கங்கள். அதனால், சில முக்கிய செயல்திறன் வழிகாட்டிகளை தொழில் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன இயக்குனர் சுதீப் டால்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

208 விருதுகள்

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, ஆற்றல், கார்பன் தடம், நீர் மேலாண்மை, பணியிடை சுகாதாரம், சாலைப் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு, பணியிடத்தில் சுற்றுச்சூழல், அதில் பணியாளர் ஈடுபாடு, தலைமைப்பன்பு ஆகியவற்றில், 208 விருதுகள் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.








      Dinamalar
      Follow us