ADDED : மே 28, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, முள்ளுப்பாடியில் பாரம்பரியம் மிக்க ஒயில் கும்மி அரங்கேற்றம் நடந்தது.
கிணத்துக்கடவு, முள்ளுப்பாடியில் உள்ள தனியார் தோட்டத்தில், பாரம்பரியத்தையும், பழமையையும் மீட்கும் விதமாக, பழனி ஆண்டவர் ஒயில் கும்மி குழு சார்பில், ஒயில் கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில், வடக்கு நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி வாத்தியார் (ஸ்ரீ வள்ளி முருகன் ஒயில்கும்மி குழு), ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒயில் கும்மி அரங்கேற்றினர். முள்ளுப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.